தகவல் தொழில் நுட்பங்கள் வெகுவாக முன்னேறி விட்ட காலத்தில் மருத்துவ அறிவுரைகளுக்கு இணையத்தில் எங்குமே பஞ்சமில்லை. இருப்பினும் அவற்றைக் குறித்த நம்பகத்தன்மை எப்போதுமே பலருக்கு எழத்தான் செய்கிறது. குறிப்பாக, ஆங்கில மருத்துவக் குறிப்புகளுடன் அனைத்துவிதமான மாற்றுமருத்துவக் குறிப்புகளும் உலா வரும் போது அவற்றை முறையாக பிரித்தறிந்து செயல்பட பலருக்கு உரிய பக்குவம் இல்லை. இதனை மனதிற்கொண்டு, இணையத்தில் பலர் புகுந்து விளையாடுகின்றர். வியாபார நோக்கில் செயல்படும் தகவலில் நம்பகத்தன்மை கொண்டோரும் இதில் விதி விலக்கல்ல.
இந்த நிலையில், ஒரு பொதுமருத்துவர் (General Practitioner) என்ற முறையில் 15 வருடங்களுக்கும் மேலான எனது அனுபவத்தில், அன்றாடம் நான் சந்திக்கும் நோயாளிகளின் பிரச்சினைகள், அவர்கள் எழுப்பும் கேள்விகளின் அடிப்படையில் எழும் மருத்துவக் குறிப்புக்களை எனது வாசகர்களுக்கு பிரயோஜனமாக எழுத்து வடிவில் கொண்டுவந்து சேர்ப்பதே இந்த முயற்சி.
அவ்வப்போது தங்கள் பின்னூட்டங்கள், கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் தங்களுக்கு எழும் கேள்விகளை வழங்கி உதவிட வேண்டுகிறேன்.